close
Choose your channels

110 நாட்கள் தொடர் படப்பிடிப்பு.. தனுஷின் 'D50' படத்தின் தற்போதைய நிலை என்ன?

Wednesday, November 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து இயக்கி வரும் ‘D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘D50' படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 110 நாட்கள் நடந்ததாகவும் இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இதனை அடுத்து தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் ஏற்கனவே ‘பா பாண்டி’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்திற்கு நேர் எதிராக இந்த படத்தின் கதை அம்சம் இருக்கும் என்றும் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்தின் திரைக்கதை இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘D50' படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிகா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’D51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment