தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்காக விண்ணப்பிக்கப்பட்டதாகவும் நேற்று தயாரிப்பாளர் கூறிய செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷின் அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

சிக்கிய மரண வாக்குமூலம்: யாஷிகா காதலன் கைது!

விமல் நடித்த 'மன்னர் வகையறா' உள்பட ஒருசில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவருமான ஷீலா ஜெபராணி என்ற நடிகை யாஷிகா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை

இணையத்தில் வைரலாகும் செளந்தர்யா-விசாகன் ஹனிமூன் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா, கடந்த 11ஆம் தேதி தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் தமிழக முதல்வர், துணைமுதல்வர்

சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் அஜித் திடீர் சந்திப்பு!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஆறு வாரங்களை கடந்தும் இன்னும் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது

தளபதி 63 பிசியிலும் விக்னேஷ் சிவனுக்காக நேரம் ஒதுக்கிய அட்லி

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படப்பிடிப்பில் இயக்குனர் அட்லி இருப்பது அனைவரும் அறிந்ததே. 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு

யூடியூப் விமர்சகர்களுக்கு பிரபல இயக்குனர் எச்சரிக்கை

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு திரைப்படம் வெளியாகும்போது அந்த படத்தை ஒருசில முன்னணி பத்திரிகைகள் மட்டுமே விமர்சனம் செய்து வந்தன.