இன்னும் 3 வருடங்களுக்கு அந்த தனுஷை பார்க்க முடியாது: டுவிட்டர் ஸ்பேஸில் தனுஷ் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் தனுஷ் உரையாடிய சில கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ குழுவினர் உரையாடியபோது, அதில் தனுஷ் பேசியபோது, ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் போல் ’ஜகமே தந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை என்று கூறினார். முதலில் இந்த படத்திற்கு ’சுருளி’ என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்கு சரியான தலைப்பை தேர்வு செய்து ’ஜகமே தந்திரம்’ என்று மாற்றியதாகவும், அவருக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

’ஜகமே தந்திரம்’ படத்தில் ஆங்காங்கே ரஜினிகாந்த் சாயல் இருக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் அதனை அனுமதித்தார் என்றும் அதனால் ரஜினி ரசிகர்கள் தயவு செய்து திட்ட வேண்டாம் என்றும் நடிப்பை ரசியுங்ன்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ஹாலிவுட்டில் தனக்கு 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என்றும் ஆனால் ரிகர்சல் காரணமாகத்தான் அதிக நாட்கள் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்றும் இந்த வாய்ப்பை சரியானபடி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்

அமெரிக்காவில் இருப்பது சில சமயம் கஷ்டமாக உள்ளது என்றும் ஆனால் ரசிகர்கள் அன்பால் அது தெரியவில்லை என்றும் இன்னும் இருபது நாட்கள் தான் படப்பிடிப்பு அதன்பின் சென்னை வர இருப்பதாகவும் அம்மாவின் கையால் சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுசை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

More News

தனுஷின் ரசிகையாக மாறிவிட்டேன்: 'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பாப்பா ஸ்ரேயா ஷர்மா பேட்டி!

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த வெற்றி திரைப்படங்களில் ஒன்று 'சில்லுனு ஒரு காதல்'என்பதும் இந்த படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின்

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை: புகைப்படம் வைரல்

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே..

காவலரை கடுமையாக திட்டிய பெண் வக்கீல்...! கடுப்பாகி டுவிட் போட்ட கஸ்தூரி...!

காவல் அதிகாரிகளை கடுமையாக பேசிய, பெண் வக்கீல் மீது 7 துறைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் கமல்ஹாசன் - மகேஷ்பாபு?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த மொழியிலுள்ள பிரபலங்கள் அந்தந்த மொழியில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தென்னிந்திய பிரபலங்கள் இணைந்து நடிக்கும்

'இந்தியன் 2', 'விக்ரம்' படங்களுக்கு முன் ஒரு கமல் படம்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விரைவில் அவர் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது