close
Choose your channels

'வாத்தி' இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு.. ஹீரோ இந்த பிரபலமா?

Thursday, July 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’வாத்தி’ என்ற திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாத்தி’ படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் இதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த படத்தையும் வெங்கி அட்லுரி இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும் ’வாத்தி’ திரைப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் டைட்டில் நாளை மதியம் 1:44 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த படத்தில் பணி புரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment