'வாத்தி' சிங்கிள் பாடல்: தனுஷின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Tuesday,November 08 2022]

தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன என்பதும் முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 10ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் தனுஷ் மற்றும் ஸ்வேதா மேனன் பாடி இருப்பதாகவும் சற்றுமுன் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்யும் போது அதை தனுஷ் பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் சாய் குமார் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஜயானந்த்' படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ

ஆடம்பர பங்களா, கிலோ கணக்கில் தங்கம், கார்.. தமிழ் நடிகைக்கு ரூ.30 கோடி பரிசளித்த கணவர்!

தமிழ் நடிகை ஒருவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அவருக்கு அவரது கணவர் ஆடம்பர பங்களா,  தங்க நகைகள் மற்றும் கார் என சுமார் 30 கோடியில் பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நேற்று 41, இன்று 17.. நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆனதை அடுத்து 'அனுஷ்கா 17' என்ற ஹேஷ்டேக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கார்த்தியின் அடுத்த பட டைட்டில்.. நாயகி உள்பட முழு விபரங்கள்!

 கார்த்தி நடித்த 'விருமன்', 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளன. 

உதயநிதியின் அடுத்த படம் குறித்த தகவல்: விரைவில் புரமோஷன் ஆரம்பம்!

உதயநிதி ஸ்டாலின் தற்போது 'கலகத்தலைவன்' மற்றும் 'மாமன்னன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவற்றில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.