close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படம் குறித்த தகவல்: விரைவில் புரமோஷன் ஆரம்பம்!

Tuesday, November 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் தற்போது ’கலகத்தலைவன்’ மற்றும் ’மாமன்னன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவற்றில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’கலகத்தலைவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளன. 

இந்த நிலையில் ’கலகத்தலைவன்’ திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

’தடம்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது என்று குறிப்பிட்டத்தக்கது.

’கலகத்தலைவன்’  படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் ’மாமன்னன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.