பிரமாண்டமான புது வீட்டில் ரசிகர்களுக்கு விருந்து வைத்த தனுஷ்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,February 20 2023]

சென்னையின் முக்கிய பகுதியான போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் புது வீடு கட்டி வந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

தனது பெற்றோர்களுக்கு இந்த வீட்டை தனுஷ் அர்ப்பணித்து உள்ளார் என்றும் இந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த வீட்டில் பிரமாண்டமான நீச்சல் குளம், ஆடம்பர உள் விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் சர்வதேச தரத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் இன்டீரியர் வேலைக்களுக்காகவே பல லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் புது வீட்டில் தனது பெற்றோர்களை அழைத்து வந்து கௌரவப்படுத்திய தனுஷ், ரசிகர்களையும் அழைத்து வந்து விருந்து வைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை குடும்பத்துடன் அழைத்த தனுஷ் தனது புது வீட்டை அவர்களுக்கு சுற்றி காண்பித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


More News

விஜய்யின் 'லியோ'வில் விஜய்சேதுபதி? ஹிண்ட் கொடுத்த படக்குழு..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படம் ஒரு லோகேஷின் LCU படம் என்றும் இந்த படத்தில் லோகேஷ் கதாகராஜின் முந்தைய படங்களின் கேரக்டர்கள் வருவதற்கு

மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்: ரஜினிகாந்த்

 நடிகர் மயில்சாமி நேற்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் மயில்சாமியின் மறைவு குறித்து பேட்டி அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்

மூன்றே நாட்களில் தனுஷின் 'வாத்தி' வசூல் இத்தனை கோடியா? திரையுலகினர் ஆச்சரியம்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நீச்சல் உடையில் கணவருடன் டிடியின் அக்கா..! வைரல் புகைப்படங்கள்..!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடிஎன்ற திவ்யதர்சனியின் சகோதரி பிரியதர்ஷினி தனது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

4 நாய்கள் சேர்ந்தா ஒரு காட்டு யானையையே காலி பன்னிடும்.. ஆண்ட்ரியாவின் 'நோ எண்ட்ரி' டிரைலர்..!

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'நோ எண்ட்ரி' என்ற படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.