close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த தனுஷ்.. நெகிழ்ச்சியுடன் தெரிவித்த நன்றி..!

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 68’ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் தனுஷ் இணைந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இந்த படத்தில் நடிகரும் வெங்கட் பிரபுவுக்கு நெருக்கமானவருமான ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் லீலா, குமாரவேல், விசாலினி, ஐஸ்வர்யா, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், கேபிஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வெங்கட்பிரபுவும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும் இயக்குனர் ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் தங்களது படத்திற்கு ஒரு பாடலை பாடி கொடுத்த தனுஷ் அவர்களுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment