கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது தனுஷின் தோட்டா

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கி வரும் 'பவர்பாண்டி' படத்தின் பணிகள் முடிந்ததும் மீண்டும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் நாளை இரவு எட்டு மணிக்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தனுஷ் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.ஜான் ஒளிப்பதிவு, அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

More News

த்ரிஷாவாக மாற ஆசைப்படும் விஷால்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவான 'கத்திச்சண்டை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று விஷால் சமூக வலைத்தளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.

2016ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர். அஸ்வினை தேர்வு செய்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி ஆல்ரவுண்ரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.

ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு குவியும் சிலை ஆர்டர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி ஒருவர் செய்த பல சிலைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததோடு, அவரது சிலை அமைப்பையும் பலமுறை பாராட்டியுள்ளார்.

யார் இந்த சேகர் ரெட்டி? வருமான வரித்துறையினர்களிடம் சிக்கியது எப்படி?

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய வருமான வரித்துறையினர்களின் சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா இறந்த தினத்தில் ராம்மோகன் ராவ் செய்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தினத்தில் தமிழகம் மட்டுமின்றி நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில்...