close
Choose your channels

த்ரிஷாவாக மாற ஆசைப்படும் விஷால்

Friday, December 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவான 'கத்திச்சண்டை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று விஷால் சமூக வலைத்தளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார். இந்த உரையாடலில் அவர் ஒருசில சுவாரஸ்மான கேள்விக்கு வித்தியாசமான பதில்களை அளித்துள்ளார்.

அவற்றில் ஒன்று 'த்ரிஷாவை பற்றி ஒருசில வார்த்தைகள் கூறவும் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஷால், 'நான் பெண்ணாக பிறந்திருந்தால் த்ரிஷாவாக வாழ்ந்திருப்பேன். அவருடைய வாழ்க்கையை வாழ்பவர் வாழ்க்கையில் முழுமை பெறுவார்கள்' என்று கூறியுள்ளார்.

அதேபோல் 'இளையதளபதி விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷால் 'பூவே உனக்காக' என்று கூறியுள்ளார். மேலும் இன்னொரு ரசிகர், 'அஜித் குறித்து ஏதாவது கூறுங்கள். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு 'கண்டிப்பாக நடிப்பேன். அவர் ஒரு திறந்த மனதை உடையவர்' என்று பதில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.