close
Choose your channels

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் இணையும் பிரபலங்கள்.. செம அப்டேட்

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வருடம் ’வாத்தி’ மற்றும் ’கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’பா பாண்டி’ படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ’ராயன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

ராயபுரத்தில் உள்ள மூன்று அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாசப்பிணைப்புதான் இந்த படத்தின் கதை என்றும் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் மற்றும் தனுஷ் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகளாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ’சார்பட்டா பரம்பரை’ துஷாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அதே போல் காளிதாஸ் ஜெயராமன் இந்த படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த படம் என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment