close
Choose your channels

மூன்று மொழிகளில் தனுஷின் அடுத்த படம்? இயக்குனர் யார்  தெரியுமா?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’கேப்டன் மில்லர்' படத்தை முடித்தவுடன் அவர் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடித்த ’நீ எங்கே என் அன்பே’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய சேகர் கம்முலா தனுஷை வித்தியாசமான கோணத்தில் திரையில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்றைய பூஜையின்போது வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment