கார்த்திக் சுப்புராஜூடன் 2வது முறையாக இணையும் தனுஷ்?

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மேலும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தை 'மேயாதா மான்' இயக்குனர் ரத்னகுமார் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது தனுஷ், வெற்றிமாறனின் 'வடசென்னை' மற்றும் கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து பாலாஜி மோகனின் 'மாரி 2', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஆகிய படங்களை முடித்துவிட்டு, பின்னர் 'மேயாத மான்' இயக்குனர் படத்தில் தனுஷ் இணைவார் என்று கூறப்படுகிறது

More News

கரு.பழனியப்பனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கும் அடுத்த படமான 'புகழேந்தி என்னும் நான்' என்ற அரசியல் த்ரில்லர் படத்தின் நாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

நேற்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பெயர், கொடி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'வேலைக்காரன்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இன்று காலை நமீதா-வீரா திருமணம்: திருப்பதியில் நடந்தது

நடிகை நமீதா இன்று காலை தனது காதலர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் உறவினர், நண்பர்கள், திரையுலகினர் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது