close
Choose your channels

'லால் சலாம்' டிரைலர்.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு தெரிக்காதது ஏன்?

Tuesday, February 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த ட்ரெய்லரை பகிர்ந்து, தலைவர், சூப்பர் ஸ்டார் என ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பொதுவாக ’லால் சலாம்’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்து என்று கூறிய நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்காததை கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நிலையில் அவ்வப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று ’லால் சலாம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அவர் ’லால் சலாம்’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறிய கூறியதோடு ட்ரெய்லரையும் பகிர்ந்து உள்ளார். மேலும் தலைவர், சூப்பர் ஸ்டார் ஆகிய ஹேஷ்டாக்கையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தனுஷ் வாழ்த்து கூறி இருக்கலாம் என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.