வாக்காளர்களுக்கு தல மகளின் அன்புக்கட்டளை

இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் ஏழு மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது., அவற்றில் ஒன்று தல தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலமும் ஒன்று.

இன்று காலை தனது மனைவி சாக்சியுடன் சென்று தல தோனி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் அவர் தான் சிறுவயதில் படித்த பள்ளியிலேயே அவர் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தல தோனியின் மகளின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 'எல்லோரும் சென்று ஓட்டு போடுங்கள்' என்று தோனியின் மகள் செல்லக்குரலில் அன்புக்கட்டளையாக கூறிய வீடியோ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

More News

'நீயா 2' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: காரணம் இதுதான்!

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி நடிப்பில் உருவான 'நீயா 2' திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது

இஸ்லாம் மதம் மாறிவிட்டாரா கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி தனது துணிச்சலான அரசியல் மற்றும் சமூக கருத்துக்களால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதுமட்டுமின்றி சில சமயங்களில் சர்ச்சைகளிலும் அவர் சிக்குவது உண்டு.

ஒரே நாளில் இரண்டு பிரபுதேவா-தமன்னா படங்கள் ரிலீஸ்!

பிரபுதேவா ,தமன்னா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பாண்ட்யா படத்தை போட்டு திட்டு வாங்கிய பிரபல நடிகை!

மும்பை அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நெட்டிசன்களிடம் பிரபல நடிகை ஒருவர் திட்டு வாங்கி கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் சங்க தலைவர், செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது யார்?

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.