தோனி என்ன முடிவெடுப்பார்: ஐஐடி தேர்வில் ருசிகர கேள்வி

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான முதல் பிளே ஆஃப் போட்டியில் டாஸ் வென்ற தல தோனி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. மும்பை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேசிங் செய்து சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனால் இந்த முறை முதலில் பேட்டிங் எடுத்திருக்கலாம் என்றும், முதலில் பந்துவீசினால் பனித்துளி காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் பேட்டிங் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் தோனியின் அன்றைய முடிவு பல காரணங்களால் சக்ஸஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு முந்தைய நாள் அதாவது மே 6ஆம் தேதி ஐஐடி சென்னை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இதுகுறித்த கேள்வி ஒன்று கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் என்பவர் தயாரித்திருந்த இந்த கேள்வித்தாளில் சென்னையில் இரவு ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச சவாலாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் போகும் . எனவே ஐபிஎல் பிளே ஆஃப் 1 போட்டியில், டாஸ் வென்றால் டோனி என்ன முடிவெடுப்பார் என்பதை விளக்கவும் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது

இந்த கேள்வித்தாள் குறித்த தகவலை ஐசிசி தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

More News

சூர்யாவின் 'என்.ஜி.கே': முதல் நாள் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை!

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர்களுக்கு புதிய பதவி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் தனி அலுவலரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பது தெரிந்ததே.

காதலியின் கருவை கலைத்து, திருமண செய்துகொள்வதாக அழைத்து சென்று... விஷம் கொடுத்து கொள்ள துணிந்த காதலன்!

சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில், சேலத்தைச் சேர்ந்த லோகநாதன்( 26) என்பவரும், சென்னையைச் சேர்ந்த பிரியா (23) என்பவரும், ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்...

பிரச்சாரத்தை விட கழுதை உயிர் தான் முக்கியம்! ஓடிப்போய் உதவிய மேனகா காந்தி!

மத்திய அமைச்சரும், இந்திரா காந்தியின் மருமகளுமான மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்த தந்தை-மகன்!

ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அடங்கமறு' திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டன் சிவா மற்றும் நடன இயக்குனராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர்