'நான் என்ன காரா? பைக்கா? பழகி பார்த்து ஓகே சொல்வதற்கு? 'எல்ஜிஎம்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, விஜே விஜய் நடிப்பில் உருவான ‘எல்ஜிஎம்’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா காதலிக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் அம்மாவை விட்டுவிட்டு வரவேண்டும் என இவானா நிபந்தனை விதிக்கிறார். ஆனால் தனது அம்மாவை விட்டு வர முடியாது என்று ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.

இந்த நிலையில் நதியாவுடன் பழகி பார்க்கலாம் என்று இவானா டூர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய அந்த டூரில் ஒரு விபரீதம் நடக்கிறது. அதன் பிறகு என்ன ஆனது? மாமியார் மருமகள் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா வழக்கம்போல் ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கி உள்ளனர். நதியா ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தோனி நேற்றைய விழாவில் கூறியது போல் அவர் கண்களாலேயே பேசி நடித்துள்ளார் என்பதும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி ஒரு ஜனரஞ்சகமான குடும்ப மற்றும் ரொமான்ஸ் படத்தை இயக்கியுள்ளார் என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்து உள்ளார். விஸ்வஜித் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அணையாது எரியும் ஒரு பெயர் நீ'.. அர்ஜுன் தாஸ் நடித்த 'அநீதி' டீசர்..!

பிரபல இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான 'அநீதி' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த கடினமான 6 மாதங்கள்: சமந்தாவின் உருக்கமான பதிவு..!

 தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளதாக உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நீங்க தான் இந்தியாவின் ஷகிரா.. ரசிகர் பகிர்ந்த வீடியோ பார்த்து அசந்துபோன தமன்னா..!

 இந்தியாவின் ஷகிரா நீங்கள்தான் என்று தமன்னா குறித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து தமன்னா அசந்து போய் தனது கருத்தை தெரிவித்துள்ளார்

கலவரத்திற்கு நடுவே பாரிஸ் பறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி… ரசிகர்களுக்கு விடுத்த செய்தி?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகு பாரிஸ் சென்றிருக்கும் புகைப்படங்களை

சிஎஸ்கே அணியில் யோகிபாபுவை இணைக்கிறாரா தோனி.. அவரே அளித்த ஆச்சரியமான தகவல்..!

யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் இணைக்க சம்மதம் என்றும் ஆனால் ஒரு நிபந்தனை என்றும் தல தோனி என்று 'எல்.ஜி.எம்' பட விழாவில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.