close
Choose your channels

'நான் என்ன காரா? பைக்கா? பழகி பார்த்து ஓகே சொல்வதற்கு? 'எல்ஜிஎம்' டிரைலர்..!

Tuesday, July 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, விஜே விஜய் நடிப்பில் உருவான ‘எல்ஜிஎம்’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா காதலிக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் அம்மாவை விட்டுவிட்டு வரவேண்டும் என இவானா நிபந்தனை விதிக்கிறார். ஆனால் தனது அம்மாவை விட்டு வர முடியாது என்று ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.

இந்த நிலையில் நதியாவுடன் பழகி பார்க்கலாம் என்று இவானா டூர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய அந்த டூரில் ஒரு விபரீதம் நடக்கிறது. அதன் பிறகு என்ன ஆனது? மாமியார் மருமகள் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா வழக்கம்போல் ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கி உள்ளனர். நதியா ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தோனி நேற்றைய விழாவில் கூறியது போல் அவர் கண்களாலேயே பேசி நடித்துள்ளார் என்பதும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி ஒரு ஜனரஞ்சகமான குடும்ப மற்றும் ரொமான்ஸ் படத்தை இயக்கியுள்ளார் என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்து உள்ளார். விஸ்வஜித் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment