இதை நான் சொல்லவே இல்லை: ரத்தன் டாடா விளக்கம்

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1500 கோடி கொடுத்து நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருடைய அறிவிப்புக்கு பின் வெளிநாட்டு பொருட்களை இனி வாங்க மாட்டோம், டாடாவின் பொருள்கள் உள்பட இந்திய பொருட்களையே வாங்குவோம் என பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி மொழி எடுத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ரத்தன் டாடா கூறியதாக ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படத்துடன் வெளிவந்து வைரலானது. இந்த அறிக்கையை பிரபலங்கள் ஒருசிலரும் பகிர்ந்தனர். அந்த அறிக்கையில் ’கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மனிதர்களுக்கான உந்துதல் மற்றும் உறுதியான முயற்சிகள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் 2-ம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானுக்கு எதிர்காலம் இல்லை என்று கூறப்பட்டதாகவும் ஆனா இன்று அவர்களுடைய நிலை என சில உதாரணங்களைக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இறுதியாக, கொரோனாவை வீழ்த்தி இந்தியப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலையை அடையும் என்று ரத்தன் டாடா கூறியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த நிலையில் அந்த அறிக்கை தன்னுடைய பதிவு இல்லை என்று ரத்தன் டாடா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்தப் பதிவு என்னால் சொல்லப்படவோ எழுதப்படவோ இல்லை என்றும், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு பிறருக்கு பகிருங்கள் என்றும், எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்று தோன்றினால் என்னுடைய அதிகாரபூர்வ சேனல்களில் மட்டுமே கூறுவேன் என்றும், கூறிய டாடா, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News

8000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடி உதவியா? மதுவந்தி வீடியோவுக்கு நெட்டிசன்கள் ரியாக்சன்

பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற சொன்னார். அதற்கு விளக்கம் கூறிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி

கொரோனா ஊரடங்கில் அசத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள்!!!

கொரோனா  ஊரடங்கில் உலகம் முழுவதும் உள்ள காவல் துறை அல்லாடிக்கொண்டு வருகிறது.

சென்னையில் பெண் மருத்துவரை அடுத்து ஆண் மருத்துவருக்கும் கொரோனா: பெரும் பரபரப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சற்றுமுன் வெளியான தகவலை

ரூ. 3 கோடியை அடுத்து ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நிதியாக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி சமீபத்தில் நிதியுதவி செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஹிலாரி ஹீத் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது