அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம்: திலீப் சுப்பராயன்

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று வரவேற்க இப்பொழுது முதலே அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தில் ஸ்டண்ட் இயக்குனராகிய பணியாற்றிய திலீப் சுப்பராயன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

'சிறுத்தை' படத்திற்கு பின்னர் நீளமான சண்டைக்காட்சிகள் இந்த படத்தில் இயக்குனர் சிவா வைத்துள்ளதாகவும், இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்துமே மாஸ் ஆக இருக்கும் என்றும், இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்றும் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம் டூப் என்றும் எவ்வளவு ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள் இருந்தாலும் டூப் போட அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும், இந்த படத்திலும் டூப் இன்றி அவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள சண்டைக்காட்சிகள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய முதல் படம் அஜித் நடித்த 'ஜீ' படம் தான் என்றும், அதன்பின்னர் 'மங்காத்தா உள்பட பல படங்களில் அவருடன் பணிபுரிந்துள்ளதாகவும், அப்போது இருந்த அதே எளிமையான அஜித்தைத்தான் இன்றும் தான் பார்ப்பதாக திலீப் சுப்பராயன் கூறியுள்ளார்.

 

More News

கேரள முதல்வரிடம் கமல்ஹாசன் கேட்ட உதவி

உலக நாயகன் கமல்ஹாசனும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்ததே. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், ஆரம்பித்த பின்னரும் பினரயி விஜயன் அவர்களை

பிரபுதேவாவின் 'சார்லி சாப்ளின் 2: சென்சார் தகவல்கள்

பிரபுதேவா, பிரபு நடித்த 'சார்லி சாப்ளின்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த' படத்தின் இரண்டாம் பாகமான 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம்

25 நாளில் 25வது படம்: விஜய்சேதுபதிகாக சீதக்காதி படக்குழுவின் வீடியோ

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி, வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'சீதக்காதி' திரைப்படத்துடன் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தனுஷின் 'ரெளடி பேபி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'மாரி 2' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்ற தகவலையும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது என்ற செய்தியையும் சற்றுமுன் பார்த்தோம்

ஒவ்வொரு ஃபிரேமையும் ரசித்தேன்: தினேஷ் கார்த்திக் பாராட்டிய படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று