close
Choose your channels

அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம்: திலீப் சுப்பராயன்

Tuesday, November 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று வரவேற்க இப்பொழுது முதலே அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தில் ஸ்டண்ட் இயக்குனராகிய பணியாற்றிய திலீப் சுப்பராயன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

'சிறுத்தை' படத்திற்கு பின்னர் நீளமான சண்டைக்காட்சிகள் இந்த படத்தில் இயக்குனர் சிவா வைத்துள்ளதாகவும், இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்துமே மாஸ் ஆக இருக்கும் என்றும், இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்றும் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம் டூப் என்றும் எவ்வளவு ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள் இருந்தாலும் டூப் போட அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும், இந்த படத்திலும் டூப் இன்றி அவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள சண்டைக்காட்சிகள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய முதல் படம் அஜித் நடித்த 'ஜீ' படம் தான் என்றும், அதன்பின்னர் 'மங்காத்தா உள்பட பல படங்களில் அவருடன் பணிபுரிந்துள்ளதாகவும், அப்போது இருந்த அதே எளிமையான அஜித்தைத்தான் இன்றும் தான் பார்ப்பதாக திலீப் சுப்பராயன் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.