இயக்குனர் சங்க தேர்தல் தேதி மாற்றம்: புதிய தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்து.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இயக்குனர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் பாரதிராஜா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுவார் என்று கருதப்பட்ட சேரன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் அவரால் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் அவரது பெயர் வெளியேறும் பட்டியலில் இருப்பதால் இந்த வாரம் ஞாயிறு அன்று அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவேளை வெளியேறினால், தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சங்க தேர்தலில் ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 1 பொருளாளர், 4 இணைச்செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வரலட்சுமி கூட்டணியில் மிஸ் ஆன த்ரிஷா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை

மகன் இயக்குனராக முழு சொத்தையும் விற்றுக் கொடுத்த பெற்றோர்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இயக்குனர் சுரேந்திரன் இயக்கியிருக்கும் காதல் படம் 'மாயபிம்பம்'. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இம்மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது

ஜோதிகா பட பாடலை ஜோராக பாடிய சாயிஷா

சூர்யா, ஜோதிகா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'காக்க காக்க' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் என்றாலும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்த பாடல் 'ஒன்றா இரண்டா'

தோழியுடன் இணைந்து பேபிக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா!

ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று வழிபடுவது ரஜினி, அஜித் உள்பட பல நடிகர்  நடிகைகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

கிரண்பேடியின் டுவீட்டுக்கு பாராட்டும் கண்டனமும் தெரிவித்த பிரபல நடிகை!

புதுவை கவர்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அம்மாநில முதல்வருக்கு குடைச்சல் கொடுத்து வரும் கிரண்பேடி தற்போது மாநில எல்லை தாண்டி தமிழக அரசியல், தமிழக மக்கள் குறித்தும்