close
Choose your channels

தோழியுடன் இணைந்து பேபிக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா!

Tuesday, July 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று வழிபடுவது ரஜினி, அஜித் உள்பட பல நடிகர் நடிகைகளின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமந்தா நடித்த 'ஓ பேபி' திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சமந்தா திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார்.

'ஓ பேபி' திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக சமந்தா தனது தோழியும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

நாக செளரியாவுடன் சமந்தா நடித்த 'ஓ பேபி' திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் அதே ஜூலை 5ஆம் தேதி தமிழிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'மஜிலி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் சமந்தாவுக்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.