சரியாக ரீமேக் செய்யப்பட்ட படம் 'மெர்சல்' தான்: அட்லியை கலாய்த்த பிரபல இயக்குனர்

சரியாக ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படம் எது என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பிரபல இயக்குனர் அட்லீயின் ’மெர்சல்’ என்று பதில் அளித்து இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’மெர்சல்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த படம் கமல்ஹாசனின் ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்று விமர்சகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் ’மிக சிறப்பாக ரீமேக் செய்யப்பட்ட படம் எது? என்ற கேள்விக்கு அவர் ’மெர்சல்’ என்று பதிலளித்தார். இந்த பதில் மூலம் அவர் இயக்குனர் அட்லியை கலாய்த்ததாக கூறப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் ’ரத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' சீசன் 3 பிரபலத்தின் வளைகாப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவரின் வளைகாப்பு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது சகஜம் தான்.

நயன்தாராவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை!

நயன்தாரா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

ஐபிஎல்-இல் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை… பகீர் கருத்தை வெளியிட்ட முக்கிய வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில் தற்போது நடைபெற்றுவரும் ஐபில்

காதலர் ஆணுறையில் ஓட்டைப் போட்ட இளம்பெண்… சிறையில் தள்ளப்பட்ட சோகம்!

ஜெர்மனி நாட்டில் உடலுறவுக் கொள்ளும்போது தனது ஆண் நண்பருக்குத் தெரியாமல் அவருடைய ஆணுறையில் ஓட்டைப் போட்டு