close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 3 பிரபலத்தின் வளைகாப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்!

Sunday, May 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவரின் வளைகாப்பு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'குக் வித் கோமாளி’ சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக இருப்பவர்களில் ஒருவர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்பதும் சில படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வளைகாப்பு நடந்த தினத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது கணவர், அம்மா, மற்றும் மாமியார், பாட்டி ஆகியோருடன் வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது என்றும் இந்த அன்னையர் தினத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி என்றும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மற்றும் தியாகங்களுக்கு சொந்தக்காரரான அம்மாவுடன் உலகில் எதையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.