மனைவியை திடீரென விவகாரத்து செய்த பாலா; காரணம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,March 08 2022]

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’சேது’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் சூர்யா நடித்த ’நந்தா’, விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’, ஆர்யா நடித்த ’நான் கடவுள்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கினார். ‘நான் கடவுள்’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் சூர்யாவின் படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார்.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் பாலா தனது மனைவியை பிரிந்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார் என்பதும் 17 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தற்போது சட்டபூர்வமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News

உக்ரைனில் இருந்து வெளியேற மறுத்த இந்திய டாக்டர்: அதிர்ச்சி காரணம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது

தேங்க்யூ தம்பி: சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன விமல்!

 நடிகர் விமல் தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு 'தேங்க்யூ தம்பி' என்று பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

ஷேர்வார்னே மரணம்: பூங்கொத்துடன் ஆம்புலன்ஸில் நுழைந்த பெண்மணி யார்?

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர் வார்னேவு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு

சிவகார்த்திகேயன் மாதிரி என்னால் நடிக்க முடியாது: அருள்நிதி

சிவகார்த்திகேயன் மாதிரி தன்னால் நடிக்க முடியாது என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிட வேண்டாம்: பிரபல அரசியல்வாதி அறிக்கை

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட வேண்டாம் என பாமக மாநில