தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அரவிந்தசாமி?

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாலாவின் அடுத்த பட அறிவிப்புகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


யாரும் எதிர்பாராத வகையில் பாலாவின் அடுத்த படத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்தசாமியின் மிரட்டலான நடிப்பை பார்த்த பாலா, தனது அடுத்த படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்பட பாலாவின் நாயகர்கள் அனைவருக்கும் வித்தியாசமான கெட்டப்பை செலக்ட் செய்த பாலா, அரவிந்தசாமிக்கு என்னவிதமான கெட்டபை கொடுக்க போகின்றார் என்பதை அறிய கோலிவுட் திரையுலகமே காத்திருக்கின்றது.

More News

சி.வி.குமாரின் நிறுவனத்தின் '144' முடிந்தது

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட சமீபத்தில் வெளியான 'இன்று நேற்று நாளை' வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார்...

'புலி' படத்தின் முதல்வார வசூல். SKT Studios நிறுவனம் தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும்...

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் பாலிவுட் பாட்ஷா

தல அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் 'தரலோக்கல்' ஆடியோ டீசர் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா...

காமெடி நடிப்பில் விஜய்யை அசத்திய மொட்டை ராஜேந்திரன்

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனுக்கு அடியாளாக, பின்னர் மெயின் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனுக்கு 'விஜய் 59' திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாக அமையும் என கூறப்படுகிறது.....

'தெறிக்க விடலாமா' டீசரை அடுத்து 'தரலோக்கல்' டீசர்

தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியாகி சமூக இணையதளங்களில் பெரும் சுனாமியை ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் ஆடியோ டீசர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....