close
Choose your channels

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் பாலிவுட் பாட்ஷா

Tuesday, October 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் 'தரலோக்கல்' ஆடியோ டீசர் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரபல பாலிவுட் பாடகர் DJ WALEY BABU அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை அனிருத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகர் DJ WALEY BABU அவர்கள் இந்த படத்திற்காக படுஸ்பீடான ராப் பாடல் ஒன்றை பாடியிருப்பதாகவும், இந்த பாடல் திரையில் ஒலிக்கும்போது அனைவரையும் எழுந்து ஆடவைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வரும் 16ஆம் தேதி அனிருத்தின் பிறந்தநாளில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் அதாவது 15ஆம் தேதி 'வேதாளம்' படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.