ஊரடங்கால் வருமானம் இல்லை: மளிகைக்கடை ஆரம்பித்த தமிழ் திரைப்பட இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருவது தெரிந்ததே. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வருமானம் சுத்தமாக இல்லை

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வறுமையின் காரணமாக மளிகை கடை ஆரம்பித்து உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. திரையுலகிலிருந்து வருமானம் இல்லை என்பதற்காக அரசையும் சமூகத்தையும் குறை சொல்லாமல் வருமானத்திற்கு மாற்று வழியைத் தேடிய அந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மௌன மழை’, ’ஒரு மழை நான்கு சாரல்’ மற்றும் ’துணிந்து செய்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள ’நானும் பேய்தான்’ என்ற திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் ஆக தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு மேலாக வேலை இன்றி வருமானம் இன்றி இருந்த இயக்குனர் ஆனந்த் இனிமேலும் சும்மா இருக்க விரும்பாமல் உடனடியாக ஒரு மளிகைக் கடையை சென்னை அருகே உள்ள முகலிவாக்கம் என்ற பகுதியில் ஆரம்பித்துள்ளார். இந்த கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போவதாக அவர் தெரிவித்துள்ளார்

திரைஉலகம் மூன்று மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருப்பதால் ஏற்கனவே திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பல்வேறு தொழில்களை செய்யவும், பல வேலைக்கு செல்லவும் ஆரம்பித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஒருவரே மளிகை கடை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா? கமல்ஹாசன்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான நிலையில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி

தமிழக கொரோனா பாதிப்பில் மீண்டும் புதிய உச்சம்:பிற மாவட்டங்களிலும் பரவுவதால் பதட்டம்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2500ஐ தாண்டியது என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி: முதல்வர் அசத்தல்

சமீபத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி ஊடுருவி வந்ததால் அவர்களை தடுக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

இவரைத்தான் திருமணம் செய்ய போகிறேன். கணவருக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் ஆர்த்தி

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான ஆர்த்தி, கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் கணேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்