சூர்யா அறிக்கையை முதல்வருக்கு டேக் செய்த இயக்குனர்!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோலிவுட் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே குரல் கொடுத்தனர் என்பது தெரிந்ததே

குறிப்பாக நடிகர் சூர்யா இது குறித்த நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அனைத்து தரப்பினர்களும் இந்த அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க

இந்நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கை குறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சூர்யா கைகோர்த்ததற்கு நன்றி .. அருமையான கடிதம். அஹிம்சை முறையில் எடுத்துச்சொல்வோம். அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விண்ணப்பமாக முன்வைப்போம். அனைவரின் தேவை இதுவென அறியும்போது அரசும் தன்னை மாற்றிக்கொள்ளும் நம்புவோம்.

மேலும் சூர்யாவின் அறிக்கையை தனது டுவிட்டர் மூலம் தமிழக முதல்வருக்கும் அவர் டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பதவிகளில் இருப்பவர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இனிமே  கொரோனா பரிசோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்: வரவிருக்கும் புது கருவி!!!

ஒட்டுமொத்த மனித இனமும் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுபடுவதற்கு வழித்தெரியாமல் இருக்கிறது.

கறுப்பினத்தவர் போராட்டத்துக்கு நன்கொடையை அள்ளிக் கொடுத்த ஜாம்பவான்!!! பாராட்டி மகிழும் ஊடகங்கள்!!!

உலகம் முழுவதும் இணைய ஊடகத்தில் மிகப்பெரிய ஜாம்பவனாகத் திகழும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ்

சிபிஐக்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள்: முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலக பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில்

ஊரடங்கு மட்டுமே கொரோனாவிற்கு தீர்வாகாது: மருத்துவ வல்லுநர் குழு பேட்டி

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பதற்கான ஆலோசனை இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.