நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா: வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Sunday,September 12 2021]

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என காமெடி நடிகர் வடிவேலுவுக்கு பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் பல்வேறு தடைகளை தகர்த்து தற்போது மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி செய்துள்ள வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் 'கிங்'

சேரன் நடித்த ’வெற்றி கொடி கட்டு’ என்ற படத்தில் வடிவேலு துபாயில் இருந்து திரும்பிய நபராக நடித்திருப்பார் என்பதும் அந்த படத்தில் அவரது காமெடி அந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா பிளான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களின் ரிலீஸ் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பிளான் செய்துள்ளதாக

அமெரிக்க ஒபன் கோப்பையை வென்ற 18 வயது வீராங்கனை… குவியும் வாழ்த்து!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் 18 வயதான பிரிட்டன் விராங்கனை எம்மா ரடுகானு.

தமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்? ஏன் இந்த சலுகை?

தமிழ்நாட்டின் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசியபோது, தமிழகத்தில் ஆறு,

படகில் போட்டோஷுட் நடத்திய நடிகை கைது… விமர்சனத்தால் விழிபிதுங்கும் சம்பவம்!

கேரளாவில் பிரபல சீரியல் நடிகை மற்றும் சோஷியல் மீடியா பிரபலம் ஒருவர் படகில் போட்டோஷுட் நடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் எப்போது? ஆச்சரிய தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என பட தயாரிப்பாளர் சமீபத்தில் உறுதி செய்தார்