close
Choose your channels

இயக்குனர் லிங்குசாமி வீட்டில் நேர்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்..!

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் காலமானதையடுத்து திரை உலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லிங்குசாமியின் அண்ணன் கேசவன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 60. லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’ஆனந்தம்’ ’பையா’ ’ரன்’ ‘தி வாரியார்’ உட்பட சில படங்களை கேசவன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய சகோதரர்கள் இருந்த நிலையில் இன்று காலை இரண்டாவது அண்ணன் கேசவன் மாரடைப்பால் காலமானார். இவர் கும்பகோணம் அருகே திருப்பதி மளிகை கடை என்ற கடையை நடத்தி வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சகோதரர்களுடன் சேர்ந்து கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காலமான லிங்குசாமி அண்ணன் கேசவன் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மறைந்த கேசவன் மகன் வினோத் என்பவர் ’கோலிசோடா 2 ’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் லிங்குசாமி தயாரித்த ’நான் தான் சிவா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment