இயக்குனர் முத்தையாவின் அடுத்த தரமான சம்பவம்.. ஹீரோ இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் அடுத்தடுத்து ‘விருமன்’ மற்றும் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்

முத்தையா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முத்தையாவின் அடுத்த படத்தில் அருண் விஜய் இணைவதால் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஷன் சாப்டர் 1’ மற்றும் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் முத்தையாவின் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'புரொஜக்ட் கே' படத்தின் டைட்டில் அறிவிப்பு.. 29ஆம் நூற்றாண்டு கதையா?

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற பிரபலங்கள் நடிக்கும் 'புரொஜக்ட் கே'  என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

காதலி இல்லையா? வாடகைக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கமே அனுமதிக்கும் விசித்திரம்…!

தனிமை எனும் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ளத்தான் பலரும் திருமணமே செய்து கொள்கின்றனர். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால் தங்களுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்ய முடியாமல் பல

கருப்பு சிவப்பு காஸ்ட்யூமில் செம்ம லுக்.. நடிகை ஹனிரோஸ் வைரல் வீடியோ..!

தமிழ், தெலுங்கு,மலையாளம் ,கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு சிவப்பு காஸ்ட்யூமில் செம கெத்தாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில்

கணவர், மகளுடன் 'பாபநாசம்' நடிகை ஆஷா சரத்: க்யூட் புகைப்படங்கள்..!

'பாபநாசம்' உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஆஷா சரத் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு

இந்த வாரம் 3 தமிழ் படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் அடுத்த ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து