close
Choose your channels

இயக்குனர் முத்தையாவின் அடுத்த தரமான சம்பவம்.. ஹீரோ இந்த பிரபலமா?

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் அடுத்தடுத்து ‘விருமன்’ மற்றும் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்

முத்தையா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முத்தையாவின் அடுத்த படத்தில் அருண் விஜய் இணைவதால் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஷன் சாப்டர் 1’ மற்றும் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் முத்தையாவின் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment