அந்த பணத்தை மட்டும் மகளுக்காக சேமித்து வச்சுருக்கேன்: மிஷ்கின்

  • IndiaGlitz, [Thursday,June 02 2022]

பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பதில் இருந்து கிடைக்கும் பணத்தை தனியாக தனது மகளுக்காக சேமித்து வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் ’சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பிறகு ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார் என்பதும் ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. தற்போது ’பிசாசு 2’ என்ற படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிப்பது குறித்து கூறிய மிஷ்கின், ‘பலர் தன்னிடம் விரும்பி நடிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், நடிப்பதற்கு அதிக பணம் தருவதாக கூறியதால் மறுக்க முடியவில்லை என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது நடிக்க மாட்டேன் என்றும் இயக்கி முடித்து அடுத்த படத்தை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நடிக்க வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

நடிப்பதால் கிடைக்கும் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன் என்றும் அது என் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்து இருக்கின்றேன் என்றும் அவர் உருக்கமுடன் கூறியுள்ளார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குனர் மிஷ்கின்திருமணத்திற்கு பின் மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்து விட்டதாகவும் நாங்கள் பிரிவதற்கு நான்தான் முழுக்க முழுக்க காரணம் என்றும், என் மனைவி தற்போது தன்னுடைய மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் என்னையும் நேசித்துக் கொண்டே இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன் என்றும் அந்த பேட்டியில் மிகவும் எமோஷனலாக கூறியுள்ளார்.

More News

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்: போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிரபல நடிகர்!

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணம்: பிரியா பவானி சங்கர்

 நடிகை பிரியா பவானி சங்கர் தனது திருமணம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரசன்னா- ரெஜினாவின் 'ஃபிங்கர்டிப்' வெப்தொடர் 2வது சீசன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது. 

உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் 'விக்ரம்' டிரைலர்: கமல் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முதல் நாளுக்குரிய அனைத்து காட்சிகளுக்கும்

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோல்ல தான் இருக்கிறேன்: கமல் முன் ஒப்புக்கொண்ட அமீர்!

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோலில் தான் இருக்கின்றேன் என்று கமல்ஹாசன் முன் அமீர் கூறியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.