லோகேஷ், அமீரால் முடியாததை செய்து காட்டுகிறாரா மிஷ்கின்? 'ட்ரெயின்' படத்தில் இணையும் பிரபலம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைக்க அமீர் மற்றும் லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்த போது, அது நடக்காத நிலையில் தற்போது அதை இயக்குனர் மிஷ்கின் நடத்தி காட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சினிமா விழா ஒன்றில் அமீர் பேசிய போது வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை என்று கூறியிருந்தார். அதேபோல் ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியபோது ’வெற்றிமாறனை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க பலமுறை தொடர்பு கொண்ட போதிலும், அவர் மறுத்துவிட்டதாக கூறியிருந்தார்
இதற்கு வெற்றிமாறன் பதில் கூறியபோது ’நடிப்பது இயக்குவது என்ற இரண்டையும் ஒரு சிலரால் தான் செய்ய முடியும், என்னால் அது முடியாது, எனக்கு நடிக்கும் ஆர்வமில்லை’ என்று கூறியிருந்தார்
ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ட்ரெயின்’ என்ற திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால், அமீர், லோகேஷால் முடியாததை மிஷ்கின் செய்து காட்டி விட்டதாக கருதப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments