close
Choose your channels

'பிசாசு 2' ஆண்ட்ரியா நிர்வாண காட்சியை படம்பிடித்தவர் யார்? மிஷ்கின் விளக்கம்

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளன. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்ததாகவும் அதன் பின்னர் அந்த காட்சியை இயக்குனர் மிஷ்கின் நீக்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் மிஸ்கின் விளக்கமளித்துள்ளார்.

’பிசாசு 2’ படத்திற்காக நிர்வாணக் காட்சிகளை படமாக்கவில்லை என்றும் புகைப்படங்களை மட்டும் தான் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கும் ஆண்ட்ரியாவுக்கு பொதுவான நண்பரான புகைப்படக்கலைஞர் தான் அந்த புகைப்படங்களை எடுத்தார் என்றும் நான் கூட அந்த புகைப்படங்களை பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

’பிசாசு 2’ படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சிகள் படத்தில் இடம் பெற்றால் தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் தருவார்கள், அதனால் குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சியை நீக்கி விட்டேன் என மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment