close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் இயக்குனர்.. 3 பிரபலங்களுடன் வேற லெவல் ஸ்கிரிப்ட்..!

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மீண்டும் விஜய் சேதுபதி படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் 3 பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் வேற லெவல் ஸ்கிரிப்ட் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் நடித்த ‘சூது கவ்வும்’ மற்றும் ’காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் தற்போது கார்த்தி நடித்துவரும் 26வது படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கார்த்தி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கார்த்தி 26’ படத்தின் படத்தை முடித்தவுடன் இயக்குனர் நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் மேலும் 3 பிரபல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் வேற லெவல் ஸ்கிரிப்ட் தயாராகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment