இந்த வெற்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது: பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் படங்களும் சரி அவருடைய டுவீட்டுக்களும் சரி, அவரது மேடைப்பேச்சுகளும் சரி ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டுமே மையமாக கொண்டிருக்கும் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல வேட்பாளர்களின் வெற்றிகள் குறித்த செய்திகள் நேற்று வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் குறித்து மட்டுமே ஒருசில டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளார்.

முதலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனின் வெற்றி இழுபறியாக இருந்த நிலையில் 'ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

அதேபோல் ஒரு கட்டத்தில் திருமாவளவன் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கிவிட்ட நிலையில், 'மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்' என்று பதிவு செய்து தனது அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More News

அசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன?

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்றரை வயது அரசியல்கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கியது.

கல்வெட்டு உண்மையானது: அதிமுகவின் ஒரே எம்பியான ஓபிஎஸ் மகன்!

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ஆர்வக்கோளாறில் தேனி தொகுதியின் எம்பி என கோவில் கல்வெட்டு ஒன்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் பெயரை

எல்லோரும் செளகிதாரை எடுத்துவிடுங்கள்: பிரதமர் மோடி கோரிக்கை

பிரதமர் மோடி உள்பட பாஜக பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலைத்தள கணக்குகளில் தங்கள் பெயருக்கு முன்னர் செளகிதர் என்ற வார்த்தையை சேர்த்து கொண்டனர்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

முதல்வர் மகனை எதிர்த்து போட்டியிட்ட ரஜினி பட நடிகை வெற்றி!

கர்நாடக மாநிலத்தில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.