இந்த வெற்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது: பா.ரஞ்சித்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் படங்களும் சரி அவருடைய டுவீட்டுக்களும் சரி, அவரது மேடைப்பேச்சுகளும் சரி ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டுமே மையமாக கொண்டிருக்கும் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல வேட்பாளர்களின் வெற்றிகள் குறித்த செய்திகள் நேற்று வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் குறித்து மட்டுமே ஒருசில டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளார்.
முதலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனின் வெற்றி இழுபறியாக இருந்த நிலையில் 'ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
அதேபோல் ஒரு கட்டத்தில் திருமாவளவன் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கிவிட்ட நிலையில், 'மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்' என்று பதிவு செய்து தனது அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால்
— pa.ranjith (@beemji) May 23, 2019
எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!!