5ஆம் பாகம் வரை 'பசங்க' படம் தொடரும். பாண்டியராஜன்

  • IndiaGlitz, [Tuesday,December 29 2015]

இயக்குனர் எம்.ராஜேஷ் என்றால் காமெடி படம், ராகவா லாரன்ஸ் என்றால் பேய்ப்படம், சிறுத்தை சிவா என்றால் ஆக்சன் படம் என ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி இருப்பதைபோல இயக்குனர் பாண்டியராஜின் பாணி குழந்தைகளை மையமாக வைத்து படமெடுப்பது. 'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்ற இயக்குனர் பாண்டியராஜன் சமீபத்தில் இயக்கிய 'பசங்க 2' திரைப்படமும் முதல் பாகத்தை போலவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் பசங்க படத்தின் இரண்டாம் பாகத்துடன் முடித்து கொள்ள தன்னால் முடியாது என்றும் தொடர்ந்து பசங்க 3, பசங்க 4, பசங்க 5 என பாகங்கள் நீண்டுகொண்டே போகும் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


குழந்தைகளை மையமாக வைத்து படமெடுக்க முக்கிய காரணம், குழந்தைகளுக்கு தேவையான படத்தை எடுத்தால் கண்டிப்பாக பெற்றோர்களும் அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்பதால் இவ்வகை படங்கள் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கிய அடுத்த படமான 'கதகளி' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரஜினியின் பாணியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்

டார்லிங், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது மூன்று...

ரஜினியின் பாணியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்

டார்லிங், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

கணவன் மனைவியை அண்ணன் தங்கையாக மாற்றிய சுந்தர் சி

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது...

வெள்ள நிவாரண நிதியாக அஜித்-விஜய் கொடுத்தது எவ்வளவு? விஷால் விளக்கம்

சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் கனமழை பெய்து அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் லட்சக்கணக்கானோர்...

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி, தற்போது பாபிசிம்ஹாவுடன் 'கோ 2'...