சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் இயக்குனர் பாண்டிராஜ் வாரிசு!

  • IndiaGlitz, [Tuesday,August 13 2019]

கோலிவுட் திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்றே. நடிகர்கள் விஜய் சேதுபதியின் மகன், ஜெயம் ரவியின் மகன் உள்பட பல நட்சத்திரங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் மகனும் அவர் இயக்கி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகம் ஆகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானது என்பது தெரிந்ததே. இதில் செகண்ட் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அருகில் ஒரு சிறுவன் இருப்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள். அந்த சிறுவன்தான் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் மகன் என்பது தெரியவந்துள்ளது.

இதே போஸ்டரில் இன்னும் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்கள் யார் என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வனிதாவை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சைக்குரிய போட்டியாளர்களான வனிதா, மீராமிதுன், சாக்சி ஆகியோர் வெளியேறியவுடன் நிகழ்ச்சி போரடிக்க தொடங்கியதால் பார்வையாளர்களை

கமல்ஹாசனுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியான 'களத்தூர் கண்ணம்மா' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த தன்ஷிகா!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'லாபம்'. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஜெகபதிபாபு நடித்து வருகிறார்.

திருடர்களை விரட்டியடித்த நெல்லை முதியவர்களுக்கு பிரபல நடிகர்  பாராட்டு!

சமீபத்தில் நெல்லை அருகே ஒரு வயதான தம்பதியர்களை இரண்டு திருடர்கள் கையில் ஆயுதங்களுடன் தாக்க முற்படுகையில் வயதான முதியவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து

'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்து குற்ற உணர்ச்சி ஏற்பட்டது: பிரபல இயக்குனர்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி ஆறாவது நாளான இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.