'சங்கி' என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! அஜித், விஜய் இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,July 25 2020]

அஜித் நடித்த ‘திருப்பதி, விஜய் நடித்த ‘சிவகாசி, திருப்பாச்சி’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பதும், அவருக்கு அக்கட்சியில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநில செயலாளர் பதவியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்தது குறித்து நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாகவே அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அவரை ‘சங்கி’ என்ற வார்த்தையை கூறி அழைத்து வருகின்றனர். தன்னை சங்கி என்று அழைக்கும் நபர்களுக்கு பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் 'சங்கி' என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர் பேரரசு பதிவு செய்த டுவீட் இதோ:

ஊழல்வாதி!
லஞ்சப்பேர்வழி
தமிழின துரோகி!
கட்டப் பஞ்சாயத்து!
பொய்யன்,புளுகன்
ஓசிச்சோறு!
கொள்ள கோஷ்டி
துரோகக் கும்பல்!
மாஃபியா!
வேடதாரி
இந்த வார்த்தைகளை விட
'சங்கி' என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்!

More News

தரக்குறைவாக விமர்சனம் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த விஷ்ணுவிஷாலின் கேர்ள் பிரண்ட்

நடிகர் விஷ்ணுவிஷாலின் கேர்ள் பிரண்ட் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பது தெரிந்ததே. இருவரும் பரஸ்பரம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது உள்பட இருவரும்

பீட்டர்பால் பிறந்த நாள்: லாக்டவுன் நேரத்தில் காரில் பார்ட்டி வைத்த வனிதா

ஒருபக்கம் வனிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்

சிலம்பம் சுற்றி அசத்தும் மூதாட்டி: சிலம்ப பயிற்சி பள்ளி அமைக்க பிரபல நடிகர் ஆலோசனை

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தெருவில் சிலம்பு சுற்றி வித்தை காட்டிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்த காவல்துறையினர்: என்ன காரணம்?

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ரஜினிகாந்த் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே .சமீபத்தில் ரஜினிகாந்த் தனது மகள் குடும்பத்துடன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வென்ற நடிகர்-இயக்குனர் 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்தும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்