close
Choose your channels

பீட்டர்பால் பிறந்த நாள்: லாக்டவுன் நேரத்தில் காரில் பார்ட்டி வைத்த வனிதா

Saturday, July 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருபக்கம் வனிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்

இந்த நிலையில் சமீபத்தில் பீட்டர்பாலை திருமணம் செய்த வனிதா அவருடைய பிறந்தநாளை நேற்று விமர்சையாக கொண்டாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தினமும் வீட்டில் சாப்பிடுவதால் பீட்டர்பாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வெளியில் போய் சாப்பிட வேண்டும் என்றும் முடிவு செய்ததாகவும், ஆனால் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட முடியாது என்பதால் ஹோட்டலில் பார்சல் வாங்கி காரில் உட்கார்ந்து பார்ட்டி வைத்து சாப்பிடுகிறோம் என்றும் வனிதா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த பிறந்தநாள் பார்ட்டியில் வனிதா, பீட்டர் பாலுடன் வனிதாவின் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாள் பார்ட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வனிதாவின் திருமணம் குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தாலும் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதையே இந்த வீடியோ காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Shopping..gals day out

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

View this post on Instagram

Miracles ...gods blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.