ரஜினியை அடுத்து எம்ஜிஆர் டைட்டிலை தேர்வு செய்த பொன்ராம்!

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

ஸ்க்ரீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ தயாரிப்பில்‌ பொன்‌.ராம்‌ - சசிகுமார்‌ கூட்டணியில் இன்று தொடங்கியுள்ள திரைப்படத்திற்கு 'எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கிய இரண்டாவது படத்திற்கு 'ரஜினி முருகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது நான்காவது படத்திற்கு 'எம்ஜிஆர் மகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிராமம்‌ சார்ந்து கமர்ஷியல்‌ படங்கள்‌ கொடுத்து வெற்றிப்‌ பெற்றவர்‌ இயக்குநர்‌ பொன்‌.ராம்‌. அவரோடு இப்போது சசிகுமார்‌ கைகோர்த்துள்ளார்‌. இந்தக்‌ கூட்டணியில்‌ உருவாகும்‌ படத்தின்‌ படப்பிடிப்பு தேனியில்‌ இன்று தொடங்கப்பட்டுள்ளது.

்‌ எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌ 'என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்‌ படத்தில்‌ சசிகுமார்‌, சத்யராஜ்‌, சரண்யா பொன்வண்ணன்‌, சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர்‌ நடிக்கின்றனர்‌. இந்தப்‌ படத்தின்‌ மூலம்‌ தமிழ்‌ தரையுலஇகில்‌ நாயகியாக களமிறங்கிறார்‌ மிருணாளினி ரவி.

கதை, திரைக்கதை, வசனம்‌ மற்றும்‌ இயக்கம்‌ ஆகிய பணிகளைக்‌ இயக்குநர்‌ பொன்‌.ராம் கவனிக்கின்றார்‌. இந்தப்‌ படத்துக்கு வினோத்‌ ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன்‌ இசையமைக்கிறார்‌. விவேக்‌ ஹர்ஷன்‌ படத்தொகுப்பு பணிகளையும்‌, துரைராஜ்‌ கலை இயக்குநராகவும்‌ பணிபுரியவுள்ளனர்‌.

சரவணன்‌ தயாரிப்பு நிர்வாகியாகவும்‌, சித்தார்த்‌, செந்தில்குமார்‌ ஆகியோர்‌ நிர்வாகத்‌ தயாரிப்பாளர்களாக பணிபரியும்‌ இந்தப்‌ படத்தை ஸ்கிரீன்‌ சீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனம்‌ பெரும்‌ பொருட்செலவில்‌ தயாரிக்கிறது.

More News

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் அளித்த விளக்கம்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து அந்தத் திரைப்படத்திற்கு நாலாபுறமும் இருந்து பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

நிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

கோவாவில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த பார்ட்டியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் ஒன்று

உலகின் முதல் சொகுசு தியேட்டர்: அபிராமி ராமநாதனின் மெகா திட்டம்

சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான அபிராமி திரையரங்கில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ள நிலையில் தற்போது நான்கு தியேட்டர்களுடன்

என் 7ம் அறிவை செருப்பால அடிக்கணும்: பார்த்திபன்

பார்த்திபன் நடித்து, இயக்கி தயாரித்த 'ஒத்த செருப்பு 7' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களின் நல்ல விமர்சனத்தை பெற்றது.