ராஜூ முருகன் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? 2 படங்களை ஒதுக்கிவிட்டு இணைவதாக தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,April 27 2024]

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’குக்கூ’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜூ முருகன் அதன் பின்னர் ’ஜிப்சி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய நிலையில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் ’ஜப்பான்’ படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறப்பான கதை அம்சத்துடன் மீடியம் பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த படத்தின் கதைக்கு சசிகுமார் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் கதை கூற, அவரும் நடிப்பதற்கு ஓகே சொல்லி விட்டதாகவும் ’ஜிப்ஸி’ படத்தை தயாரித்த அம்பேத்குமார் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்த நிலையில் அந்த படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ராஜூ முருகன் படத்திற்காக தேதி கொடுத்துள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முதல்முறையாக சசிகுமாருடன் இணையும் ராஜூ முருகன் ’ஜப்பான்’ தோல்வியிலிருந்து மீண்டு ஒரு வெற்றி படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ரீரிலீஸ் பட்டியலில் விஜய் சேதுபதியின் 2 சூப்பர் ஹிட் படங்கள்.. ரசிகர்கள் ரெடியா?

கடந்த சில மாதங்களாக சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக விஜய் நடித்த 'கில்லி'

விஜய்யின் கடைசி படத்தில் நடிப்பது இந்த பிரபல இரண்டு நடிகைகளா? இசையமைப்பாளர் யார்?

தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் 'தளபதி 69' படத்தின் நாயகிகளாக ஏற்கனவே அவருடன் நடித்த இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.. ஹாட் உடையில் விருது பெறும் வீடியோ..!

நடிகை நயன்தாரா மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமிதாப்பச்சன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது சமூக வலைதளத்தில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து

வெங்கட்பிரபுவின் ட்வீட்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!

அஜித் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் ரீரிலீஸ் குறித்த தகவலை வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் உடனே சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை