close
Choose your channels

ராஜூ முருகன் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? 2 படங்களை ஒதுக்கிவிட்டு இணைவதாக தகவல்..!

Saturday, April 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’குக்கூ’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜூ முருகன் அதன் பின்னர் ’ஜிப்சி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய நிலையில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் ’ஜப்பான்’ படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறப்பான கதை அம்சத்துடன் மீடியம் பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த படத்தின் கதைக்கு சசிகுமார் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் கதை கூற, அவரும் நடிப்பதற்கு ஓகே சொல்லி விட்டதாகவும் ’ஜிப்ஸி’ படத்தை தயாரித்த அம்பேத்குமார் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்த நிலையில் அந்த படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ராஜூ முருகன் படத்திற்காக தேதி கொடுத்துள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முதல்முறையாக சசிகுமாருடன் இணையும் ராஜூ முருகன் ’ஜப்பான்’ தோல்வியிலிருந்து மீண்டு ஒரு வெற்றி படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.