இண்டர்நேஷனல் ஸ்பை கேரக்டருக்கு அஜித் ஃபிட் ஆனது எப்படி? இயக்குனர் சிவா

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

'வேதாளம்' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் காயம் அடைந்து அதன் பின்னர் இரண்டு சர்ஜரி செய்த அஜித், 'விவேகம்' மாதிரியான ஒரு இண்டர்நேஷனல் ஸ்பை கேரக்டருக்கு தகுதி பெறுவது என்பது அசாத்தியமான விஷயம் என்று சிறுத்தை சிவா கூறியுள்ளார்.
இந்த கேரக்டருக்கு ஃபிட் ஆகுவது என்பது ரொம்ப கடினமான விஷயம் என்பது இருவருக்குமே புரிந்தது. ஆனால் அவருடைய விடாமுயற்சிதான் அவர் இந்த படத்திற்கு ஃபிட் ஆனதற்கு காரணம்
இந்த கேரக்டரில் நடிக்க வேறொரு நடிகர் தயாராவதற்கும், அஜித் தயாராவதற்கு ரொம்ப வித்தியாசம் உண்டு. ஏற்கனவே பல சர்ஜரிகள் செய்த ஒருவர் இந்த அளவுக்கு மிகச்சரியாக ஃபிட் ஆவதற்கு காரணம் அவருடைய கடுமையான உழைப்பு தான். தினமும் 4 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து, உடற்பயிற்சியாளரின் ஆலோசனையை பெற்று முழு உடல் தகுதியுடன் என் முன் வந்து படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று இயக்குனர் சிவா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

நான் அஜித்தை காப்பி அடிப்பேன்! இயக்குனர் சிவா

'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா, அஜித்தின் பட இயக்குனர் என்பதையும் தாண்டி அவருடைய சிறந்த நண்பர்களில் ஒருவராக உள்ளார்.

கமல் வீட்டு முன் திடீர் போராட்டம்: மாணவர்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்க்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசனையும், அதில் பங்கேற்று உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் சமீபத்தில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர் என்பதை பார்த்தோம் இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று முன் தினம் இரவு பத்

அஜித் என்றாலே 'கெத்து' என்று தான் அர்த்தம்: சிறுத்தை சிவா பெருமிதம்

தல அஜித் படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலே புதையல் கிடைத்தது மாதிரி இருக்கும் நிலையில் அவருடைய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு பெற்றவர் இயக்குனர் சிவா...

நான் அஜித்தை காப்பி அடிப்பேன்! இயக்குனர் சிவா

'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா, அஜித்தின் பட இயக்குனர் என்பதையும் தாண்டி அவருடைய சிறந்த நண்பர்களில் ஒருவராக உள்ளார்.

2009-2014 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு பாகம் 2

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.