'வடசென்னை' படத்தில் நீக்கப்படும் காட்சிகள்: வெற்றிமாறன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அபாரமான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'வடசென்னை' திரைப்படத்தில் ஆபாச வசனங்கள் அதிகம் இருப்பதாகவும் மீனவர் சமுகத்தை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியபோது, 'எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல என்றும், வடசென்னை படத்தில் மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆபாசமாக உள்ள வசனங்கள் இன்னும் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,.

More News

மீடூ விவகாரம்: இயக்குனர் சுசி கணேசன் நஷ்ட ஈடு கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக மீடூவில் பாலியல் குற்றச்சாட்டுக்களை நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்த பெண்கள் பிரபலங்கள் மீது சுமத்தி வருவதால் தமிழ் திரையுலகே பரபரப்பில் உள்ளது.

கூவத்தூராக மாறுகிறதா குற்றாலம்? தினகரனின் அதிரடியால் பரபரப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தபோது இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது

நல்லவேளை நான் வடசென்னை' படத்துல நடிக்கலை: விஜய்சேதுபதி

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

லேகா வாஷிங்டன் 'மீடூ' குற்றச்சாட்டு குறித்து சின்மயி

மீடூ'வில் கோலிவுட் திரையுலகினர் பலர் தற்போது தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவு செய்து வருகின்றனர்

ஆண்கள் திருமண வயதை குறைக்க வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் ஆண்களின் வயது 18 என்று இருக்கும் நிலையில் திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 வயது என்றும், ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்க வேண்டும்