பிரபல தமிழ் இயக்குனருக்கு கிடைத்த ஆஸ்கார் விருது

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

நேற்று உலகம் முழுவதும் திரை நட்சத்திரங்கள் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் லா லா லேண்ட், மூன்லைட் ஆகிய படங்கள் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் 'இறைவன் எனக்கு கொடுத்த ஆஸ்கார் விருது இதுதான்' என்று ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த இயக்குனர் யார்? அவர் கூறிய சம்பவம் என்ன என்பதை தற்போது பார்போம்

சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். பின்னர் ஒருசில வருடங்கள் கழித்து அவர் இயக்கிய விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இந்த காதல் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது அடுத்த படம் குறித்த ஆலோசனையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட இந்த நாளில் இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார்' என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் சந்திப்பு ஆஸ்கார் விருதுக்கு சமம் என்ற அர்த்தத்தில் கூறிய விக்னேஷ் சிவனுக்கு ரஜினி ரசிகர்களின் பாராட்டு மழை குவிந்து வருகிறது

தற்போது விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரவிந்தசாமி படத்தில் இணையும் 'தெறி' பேபி

'தனி ஒருவன்' மற்றும் 'போகன்' வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட அரவிந்தசாமி, சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்  வெற்றி பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்...

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு. முதல்வர், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 17ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த கூடாது என்றும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரை வலியுறுத்தினர்...

நான் ஒரு பிறவி இசைக்கலைஞன். 20 வருடம் இசைப்பயண அனுபவம் குறித்து யுவன்ஷங்கர் ராஜா

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல இசைஞானியின் இசைவாரிசுகள் இசைத்துறையில் சாதனை செய்வது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. இருப்பினும் இசைஞானியின் இசை வாரீசான யுவன்ஷங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து   இன்றுடன்  (27.02.2017) இருபது ஆண்டு காலம் நிறைவு பெறுகிறது...

ஸ்டார் ஹீரோக்களுக்கு இணையான சாதனை செய்த நயன்தாரா படம்

பொதுவாக கோலிவுட் திரையுலகில் பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்களின் டீசர், டிரைலர் மட்டுமே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெறுவது வழக்கம். பெரிய ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் மில்லியன் பார்வையாளர்களை ஒருசில நாட்களில் பெற்றுவிடுவது எளிதான ஒன்றாக இருந்து வருகிறது...

தமிழ் சினிமாவில் சுஜாதா. நினைவு தின சிறப்பு பார்வை

தமிழ் இலக்கியத்தில் புதுமையை புகுத்தி, விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் ஒரு பாலமாக இணைத்தவர் காலத்தால் மறவாத எழுத்தாளர் சுஜாதா என்றால் அது மிகையாகாது.